2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

டாக்டரை தொடர்ந்து ’டான்’

J.A. George   / 2021 ஜனவரி 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு 'டான்' எனப் பெயரிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.  இவர், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் ஆவார்.

டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஜோடி டான் படத்திற்காக இணைந்துள்ளது.

செல்லம்மா மாதிரி டான் திரைப்படத்திலும் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .