2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

தமிழிலும் வருகிறது ’மிஷன் மங்கல்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்‌ஷய் குமார், வித்யாபாலன், சோனாக்‌ஷp சின்ஹா, நித்யா மேனன், தப்ஸி உட்பட பலர் நடித்துள்ள “மிஷன் மங்கல்” திரைப்படம், செவ்வாய்க் கிரகச் சுற்றுப்பாதையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சாகசக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

 

அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தை, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜெகன் சக்தி இயக்கியுள்ளார். ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம், தமிழிலும் வெளிவருகிறது.

 

இதுகுறித்து இயக்குநர் ஜெகன் சக்தி கூறுகையில், “என் சகோதரி சுஜாதா, இஸ்ரோவில் பணிபுரிகிறார். எனவே, மங்கல்யான் மிஷன் குழுவுடன் விரிவான நேர்காணல்களைச் செய்ய முடிந்தது. இந்தத் திரைப்படத்துக்குத் தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதில், இஸ்ரோ மிகவும் உதவியாக இருந்தது. மறுபுறம், கலை இயக்குநர் மற்றும் வி.எப்.எக்ஸ் குழு, இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அங்கமாக இருந்த ​ரொக்கெட்டை வடிவமைக்க எங்களுக்கு உதவினர்.

“நாங்கள், இஸ்ரோ வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த ஆர்வமாக இருந்தோம், ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களால் அதை அனுமதிக்க முடியவில்லை. நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும், எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது. இந்த “மிஷன் மங்கல்” திரைப்படம், இஸ்ரோ வெற்றிகண்ட மங்கல்யான் பற்றியதாகும். இந்தப் பணி, ஒரு கூட்டு வெற்றியாகும். சுதந்திர தினமான ஓகஸ்ட் 15ஆம் திகதியான இன்று, இந்தத் திரைப்படம் வெளியாகிறது. ஹிந்தியில் வெளிவர இருக்கும் இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X