2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்

J.A. George   / 2021 ஜனவரி 21 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. 

இவர் தமிழில் கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் அதிலிருந்து மீண்டு வந்தார். 

ஆனால் அதன் பின்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவிற்கு மலையாள மற்றும் தமிழ் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .