2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி

J.A. George   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலிவுட்டில் ஹிட்டடித்த தளபதி விஜய்யின் 'பிரியமானவளே' படத்தின் கதை தன்னுடையது என்று நடிகரும், இயக்குனருமான விஜய் கிருஷ்ணராஜ் பேட்டி ஒன்றின் மூலம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இவருடைய கதை இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு வெளியான படம்தான் 'திறமை'. இப்படத்தில் கிராமத்தில் லிவிங் டுகெதர் லைஃப் வாழ்வது போலவே நகரத்தில் பிரியமானவளே படத்திலும் சிம்ரனை காண்டிராக்டர் மனைவி என்ற பெயரில் லிவிங் டு கெதர் லைஃப்பில் இருப்பது போன்று கதை செல்லும்.

மேலும் படத்தின் இறுதியில் குழந்தையை வைத்து தாலி கட்டுவது போன்று இரண்டு படத்திற்கும் எக்கச்சக்கமான காட்சிகள் ஒத்துப் போய் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் 'இல்லால்' என்ற படமும் இதே கதைக்களத்தை கொண்டதாம். 

எனவே தற்போது இயக்குனரும் நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் இந்த பகிரங்க குற்றச்சாட்டு தளபதி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .