Editorial / 2018 மே 17 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “கோலமாவு கோகிலா” திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நயன்தாராவின் குடும்பத்துக்கு, தீடீர் சிக்கலொன்று ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால், வேறு வழியில்லாமல் போதைப்பொருள் விற்கிறார். தினமும் வேலைக்கு அல்லது கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் போல உடை அணிந்து, முதுகில் பையொன்றை மாட்டிக்கொண்டு, போதைப்பொருள் விற்கச் சென்றுவிட்டு வீடு திரும்புவார்.
போதைப்பொருளை, “கோலமாவு” என்றே சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிடுவார்கள். அதை விற்கும் கோகிலாவான நயன்தாரா, “கோலமாவு கோகிலா” ஆகிறார். போதைப்பொருள் விற்கும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினையை, நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் கலந்து கொடுக்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி கிடையாது. ஆனால், நயன்தாரா வீடு இருக்கும் பகுதியில் கடை நடத்தும் யோகிபாபு, நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கிறார். அவர், நயன்தாராவை நினைத்து உருகும் ஒரு பாடலும் அமைந்துள்ளதாம். அந்தப் பாடலை, சிவகார்த்திகேயன் எழுதியுள்ளாராம்.

35 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
25 Jan 2026
25 Jan 2026