Editorial / 2020 ஜூன் 26 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா (எ) ஷாம்னா காசிம். இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து ‘கொடிவீரன், சவரக்கத்தி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதுதொடர்பாக கொச்சி மாவட்டம் மராடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தனக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago