2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

ரஜினி பற்றிய கிண்டல் காட்சி நீக்கம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு தினங்களுக்கு முன்னர் வெளியான, ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‛கோமாளி' படத்தின் டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இதற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசனும் கண்டனத்தை தெரிவித்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேசை அலைபேசியில் அழைத்து பேசிய கமல், "இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை. எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்" என்று கூறிருக்கிறார். 

இந்த தகவலை கமல்ஹாசனின் மக்கள் தொடர்பாளர் முரளி அப்பாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் ‛‛ரஜினி எனது நெருங்கிய நண்பர். நான் அவரது தீவிர ரசிகர். அவரை கிண்டல் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை. இது தொடர்பாக கமல் என்னிடம் பேசினார். அந்தக்காட்சியை நீக்குவதாக கூறியிருந்தேன். ரசிகர்களும் தொடர்ந்து நீக்க வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த காட்சிகளை நீக்குகிறோம்'' என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .