2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

வரலட்சுமியின் முதல் அடி

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடத்தில், தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், தமிழில் மட்டுமல்லாது மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரு கை பார்த்துவிட்டு, தற்போது தெலுங்குத் திரையுலகில் தனது முதலடியை எடுத்து வைத்துள்ளார்.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் “தெனாலி ராமகிருஷ்ணா பீ.ஏ.பீ.எல்” என்கிற இந்தத் திரைப்படத்தில், இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக வரலட்சுமி நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக, ஏற்கெனவே ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தை, நாகேஷ்வர ரெட்டி என்பவர் இயக்க உள்ளார்.

ஏற்கெனவே வரலட்சுமி நடித்த தமிழ்த் திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டு ​ தெலுங்கில்​ வெளியிடப்பட்ட நிலையில், வரலட்சுமிக்கான வரவேற்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், நேரடியாகவே தெலுங்கில் நடிப்பது அவருக்கு நிச்சயம் கை கொடுக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .