2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

வாழ்த்து மழையில் ரிச்சா

J.A. George   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2011ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய்.

சிம்புவுடன் ஒஸ்தி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் உள்ள ரசிகர்களை ஈர்த்தார். பின்னர் படிப்புக்காக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார்.

இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் சென்ற வருடம் இறுதியில் நடைபெற்றது.

இந்த நிலையில் ரிச்சா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார்.

வரும் ஜூன் மாதம் தான் தாயாக போகிறேன் என கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நெடுவாளியை மறக்காத ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X