2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

வித்தியாசமாக விஜய் சேதுபதி

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் “96” திரைப்படத்துக்குப் பிறகு, “சீதக்காதி” என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இத்திரைப் படத்தில், நாடகக் கலைஞராகவும் வயதான முதியவராகவும்,  விஜய் சேதுபதி நடிக்கிறார்.

ஏற்கெனவே, இத்திரைப்படத்தின் ​ஃபெர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்னர், அய்யா என்கிற பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி, நாடக கலைஞராக, இளமையான தோற்றத்தில் வேடன் வேடத்தில் உள்ளார். இதையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். “சீதக்காதி: திரைப்படத்துக்கு, யூ சான்று கிடைத்திருக்கிறது. விரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--