2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வேகமான ரெமோ

George   / 2016 மே 25 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில நடிகர்கள் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடிப்பதைப்பார்த்து, தனது வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ரஜினி முருகன் திரைப்படத்தை முடித்த கையோடு ரெமோ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். 

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களை விட மெகா பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது.
தற்போது அத்திரைப்பட வேலைகள் முடிந்ததை அடுத்து, மோகன்ராஜா இயக்கும் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

மோகன்ராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் திரைப்படம், இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க கோல்சீட் கொடுத்துள்ளதுடன் இன்னும் பல கதைகளையும் ஓகே செய்து வைத்திருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .