2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கார்த்தியுடன் காதலில் விழுந்தார் தமன்னா?

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுவாக நடிகைகள் என்றால் அடிக்கடி கிசுகிசுக்களில் மாட்டிக்கொள்வது சகஜம்தான். அந்தவரிசையில் இப்பொழுது கிசுகிசுவில் சிக்கியிருப்பவர் தமன்னா.

கார்த்தியுடன் பையாவில் மிகவும் நெருக்கமாக பாடல்காட்சிகளில் நடித்திருந்தவர் தமன்னா. அதன்பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதுபற்றி தமன்னாவிடம் வினவியபோது, நான் பொதுவாகவே கலகல பேர்வழி. ஆகையினால் எல்லோரிடமும் சகஜமாகவே பழகுகிறேன். இதைப் பார்ப்பவர்கள் தப்பாகப் புரிந்துகொள்கிறார்கள். இது என்னுடைய தப்பில்லை. என்னைப்போலவே கார்த்தியும் மிகவும் சகஜமாகப் பழகும் பேர்வழி என்பதால் எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகிறது. மற்றபடி நீங்கள் நினைப்பதுபோல் எதுவுமில்லை என்கிறார் தமன்னா.

தனது தந்தை சிவகுமாரும் அண்ணன் சூர்யாவும் கிசுகிசுக்களில் சிக்கியது அரிது. ஆனால் நடிக்கவந்து சில காலங்களிலேயே கார்த்தி பற்றிய கிசுகிசுக்கல் வரத் தொடங்கிவிட்டன. கார்த்தியின் அடுத்த படத்திலும் தமன்னாதான் ஹீரோயின்… ஆகையினால்தான் இந்த கிசுகிசு பரவியிருக்கிறது. தனூஷுடனும் இரண்டாவது படத்தில் இணைகிறார் தமன்னா என்பதும் குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம், நெருப்பில்லாமல் புகைகிறதா என்று…


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--