2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ரஜினிக்கு சல்மான் சவால்...

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 24 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் கலந்துகொண்டு வீதிகளை சுத்தம் செய்துள்ள நடிகர் சல்மான் கான், ரஜினிகாந்த், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் இந்த திட்டத்துக்கான சவாலை விடுத்துள்ளார்.

இம்மாதம் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தி அன்று, தூய்மை இந்தியா என்ற திட்டத்தை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இதை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என அவர் அப்போது தெரிவித்தார்.
 
மேலும், ஐஸ் பக்கெட் சவாலைப் போன்று தூய்மை இந்தியா திட்டத்திலும் நடிகர்கள் சல்மான்கான், கமல் உள்ளிட்ட ஒன்பது பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று அவர்கள் அனைவரும் தங்களது சவால்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் சல்மான் கான் மகாராஷ்டிராவின் கர்ஜட்டில் குப்பையாக கிடந்த சில பகுதிகளைத் தூய்மைப்படுத்தினார். மேலும், சில வீடுகளுக்கு வெள்ளையும் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அமீர்கான், ஆசிம் பிரேம்ஜி, சந்தா கோச்சர், ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்து அவர் சவால் விட்டிருக்கிறார்.

சல்மான்கானின் சவாலை ஏற்று ரஜினியும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



You May Also Like

  Comments - 0

  • Usha Monday, 27 October 2014 06:47 AM

    கமல் ஆரம்பித்து வைத்தாலும் வைத்தார் ஆளாளாளுக்கு ஆரம்பிச்சிட்டாங்க.

    Reply : 0       0

    rajalingam Monday, 27 October 2014 07:13 AM

    rajini good man. he is great person. he is think about good anybody nothing to wrong. ..

    Reply : 0       0

    sathish Tuesday, 28 October 2014 02:34 AM

    Ellaru vittaium suttamavachiruntha matthu pothadu nama anrada davaikaluklu nama upayokkiro porukkalla keepclear vachikkitta ellame suttamarukkum thanks every one

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .