2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

‘96’ ரீமேக்கில் சமந்தா?

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் 2018ஆம்ஆண்டு வெளிவந்தத் திரைப்படங்களில் தனி முத்திரையைப் பதித்த திரைப்படம் ‘96’. இந்தத் திரைப்படத்தை, தெலுங்கிலும் ரீமேக் செய்ய, தமிழ்த் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கியிருந்தார்.  

தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்க சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், நாயகியாக யாரை நடிக்க வைக்கப் போவது என்பதில் குழப்பம் இருந்தது. முதலில் த்ரிஷாவே நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. அதன்பின் சமந்தா நடிப்பார் என்று கூறப்படுகின்றது.  

ஆனால், சமந்தா நடிப்பதில் சந்தேகம் நிலவியது. திரைப்படத்தைப் பார்த்த பின், “த்ரிஷா, 96 பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு. எவ்வளவு அற்புதமாக நடித்துள்ளீர்கள் என்பதை எப்படி சொல்லி ஆரம்பிப்பது. உங்கள் நடிப்பு மாஸ்டர் கிளாஸ். நடிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரம்” என்று, சமந்தா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

பின்னர் இரசிகர் ஒருவர், “சமந்தா, ‘96’ ரீமேக்கில் நடிப்பாரா?” என்று கேட்டதற்கு, “‘96’, கண்டிப்பாக ரீமேக் செய்யப்படக் கூடாது” என்று கூறியிருந்தார். அதனால், சமந்தா நடிக்க மாட்டார் என்றும் ஒரு தகவல் இருந்தது. இதனிடையே, தயாரிப்பாளர் தில் ராஜு, சமந்தாவிடம் தொடர்ந்து பேசி நடிக்க சம்மதம் வாங்கிவிட்டார் என்றும் விரைவில் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரியவருகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .