Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை (செல்ஃபி) முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.
நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட படத்தை 37,600 தொலைவிலுள்ள இஸ்ரேலின் யேஹுத் ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.
பெரஷீத் ஆய்வுக் கலனின் ஒரு பகுதி தெரியும் அந்த கைப்படத்தின் பின்னணியில், பூமி இடம் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட “பெரஷீத்’ என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
585 கிலோ எடையுடைய அந்த விண்கலம், அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம், இஸ்ரேலின் ஸ்பேஸ்-ஐஎல் என்ற லாப நோக்கற்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அந்த வகையில், நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட முதல் இஸ்ரேலிய விண்கலம் என்பதுடன், அத்தகைய ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையையும் பெரஷீத் பெறுகிறது. இந்த நிலையில், அந்த விண்கலம் தன்னைத் தானே எடுத்துக் கொண்ட படத்தை தற்போது பூமிக்கு அனுப்பியுள்ளது.
7 வார பயணத்துக்குப் பிறகு பெரஷீத் விண்கலம் அடுத்த மாதம் 11-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 minute ago
6 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
31 minute ago