2020 ஜனவரி 29, புதன்கிழமை

நடைபவனி

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து வெருகல் சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்துக்கான வேல் நடைபவனி, திருகோணமலை சோலை பைரவ ஆலயக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோணேஸ்வர் கோயிலிலிருந்து இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமான வேல் தாங்கிய வேல் நடைபவனி, இன்று (16) ஐந்தாவது நாளாக மூதூர் - மேம்காமம் வீரமாகாளி அம்மன் ஆலயத்திலிருந்து பக்திப் பாடல்களோடு புறப்பட்டுச் சென்றது.

இந்த நடைபவனி, 57 அடியார்களுடன் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான தீர்த்தோற்சவத் தினமான 19ஆம் திகதி வெருகலைச் சென்றடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .