Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிகழ்வுகள்
986 – பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான்.
1807 – அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.
1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
1823 – தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1836 – டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1855 – இரண்டாம் அலெக்சாண்டர் ரஷ்யாவின் சார் மன்ன்னாக முடிசூடினான்.
1896 – எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் காலனித்துவ நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1917 – புவேர்ட்டோ ரிக்கன்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1919 – அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.
1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது ஜேர்மனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரானார்.
1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1958 – தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962 – பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
1992 – உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகியன ஐநாவில் ணைந்தன.
1995 – யாஹூ! தொடங்கப்பட்டது.
1998 – ஜூப்பிட்டரின் சந்திரனான “யூரோப்பா”வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
2002 – ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.
பிறப்புக்கள்
1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
1918 – ரஞ்சன், திரைப்பட நடிகர் (இ. 1983)
1923 – சுந்தரிபாய், நகைச்சுவை நடிகை
1931 – மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர்
1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
இறப்புக்கள்
1791 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703)
1930 – டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885)
1949 – சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879)
29 minute ago
39 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
39 minute ago
42 minute ago