Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914 : அல்பேனிய இளவரசர் வில்லியம் அவரது ஆட்சியின் மீது ஏற்பட்ட பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
1916 : முதலாம் உலகப் போர் - வடக்கு இலண்டனில் ஜேர்மனிய வான்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வீழ்த்தப்பட்ட முதலாவது ஜேர்மனிய வான்கப்பல் இதுவாகும்.
1933 : சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.
1939 : இரண்டாம் உலகப் போர் - போலந்து மீதான ஜேர்மனியின் படையெடுப்பை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன ஜேர்மனி மீது போர் தொடுத்தன. நேசப் படைகள் என்ற அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினர்.
1939 : இரண்டாம் உலகப் போர் - ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் ஜேர்மனி மீது கடல்-வழித் தடையை ஏற்படுத்தின.
1941 : பெரும் இன அழிப்பு - அவுஸ்விட்ஸ் வதைமுகாமின் பாதுகாப்பு அதிகாரி கார்ல் பிரீட்ஸ் சோவியத் போர்க்கைதிகள் மீது சைக்லோன் பி என்ற நச்சு வாயுவைப் பரிசோதித்தான்.
1943 : இரண்டாம் உலகப் போர் - நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு ஆரம்பமானது. இதே நாளில் அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர், இத்தாலியத் தளபதி பீத்ரோ பாதொக்லியோ ஆகியோருக்கிடையில் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் மால்ட்டாவில் அரச கடற்படைப் போர்க்கப்பல் ஒன்றில் கையெழுத்திடப்பட்டது.
1944 : பெரும் இன அழிப்பு - நாட்குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பமும் அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு புறப்பட்டனர். இவர்கள் மூன்று நாள்கள் கழித்து அங்கு வந்தடைந்தனர்.
1945 : ஜப்பான் மீதான சீனாவின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
1954 : மக்கள் விடுதலை இராணுவம் சீனக் குடியரசு-கட்டுப்பாட்டுப் பகுதியான கீமோய் தீவு மீது எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்தன. முதலாவது தைவான் நீநிணை நெருக்கடி ஆரம்பமானது.
1967 : சுவீடனில் இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது.
1971 : கத்தார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 : அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 : பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டுவரப்பட்டது.
1987 : புருண்டி இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான்-பாப்டிஸ்ட் பகாசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1997 : வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் நோம் பென் விமான நிலையம் அருகே வீழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
2004 : பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் - ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் மொத்தம் 186 மாணவர்கள், ஆசிரியர்கள், தீவிரவாதிகள் உட்பட 385 பேர் கொல்லப்பட்டனர்.
2017 : வட கொரியா தனது ஆறாவதும், மிகவும் ஆற்றல் மிக்கதுமான அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
4 minute ago
33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago
38 minute ago