Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911: ஒட்டோமான் இராஜ்ஜியத்திற்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடணம்
1949: சீன மக்கள் குடியரசின் எதிர்கால பொதுத் திட்டங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி வரைந்தது.
1943: அமெரிக்க தளபதி ஜெனரல் ஐஸனோவருக்கும் இத்தாலிய தளபதி பியட்ரோ படோக்லியோவுக்கும் இடையில் பிரித்தானிய கப்பலான நெல்சனில் வைத்து போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1951: அமெரிக்காவில் விளையாட்டு நிகழ்ச்சியொன்று முதன்முதலாக நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு. இரு கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்டப்போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
1960: கொங்கோ பிரச்சினையில் ஐ.நா. படைகள் தலையிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோவியத் யூனியன் பிரமர் நிக்கிட்டா குருசேவ் ஐ.நா.வில் ஆவேசமாக செயற்பட்டார். ஐ.நா. செயலாளர் நாயகம் டேக் ஹம்மர்ஸ்க்ஜோல்டை பதவி நீக்க வேண்டுமெனவும் குருசேவ் கூறினார்.
1971: அரபு லீக்கில் ஓமான் இணைந்தது.
1972: சீன மக்கள் குடியரசுடன் ஜப்பான் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தது.
1975: அமெரிக்காவில் முதல் தடவையாக கறுப்பினத்தவரை உரிமையாளராகக் கொண்ட தொலைக்காட்சி நிலையம் (WGPR) ஆரம்பம்.
1978: பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டு 33 நாட்களே கடந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். வகோரலாற்றில் மிகக் குறுகிய காலம் பாப்பரசராக விளங்கியவர் இவர்.
1979: அயர்லாந்துக்கு முதல் தடவையாக பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் விஜயம். வட அயர்லாந்து விவகாரத்தில் வன்முறையை கைவிடும்படி இரு தரப்பினரையும் அவர் கோரினார்.
1991: ஹெய்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1992: பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ கொலோர் மெல்லோவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி இராஜினாமா.
2006: பிரேஸிலில் இரு விமானங்கள் நடுவானில் மோதியதால் 154 பேர் பலி.
2008: லீமன் பிரதர்ஸ் மற்றும் வாஷிங்டன் மியூசுவல் நிதி நிறுவனங்கள் வங்குரோத்தனதைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
2009: சொலமன் தீவுகளுக்கு அருகில் 8.0 ரிக்டர் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட்டது.
55 minute ago
4 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
18 Oct 2025