2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து , சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு மற்றும் அனில் காரியவசம் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணியளவில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .