2019 ஒக்டோபர் 17, வியாழக்கிழமை

இளம் வயதில் மருத்துவராகி சாதனை

Editorial   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் 21 வயதில் மருத்துவராகி இந்திய மாணவர் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்திலேயெ அவர் கல்வி கற்றுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று இளம் வயதில் மருத்துரான முதல் மாணவனாக  அர்பன் தோஷி திகழ்கிறார்.

தன்னுடைய 17-ஆவது வயதில், பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளங்கலைத் தேர்வில் வெற்றி பெற்றபின் மருத்துவப் படிப்பில் சேர அவர் அனுமதிக்கப்பட்டார்.

குறைந்த வயதே ஆகியிருந்தபோதும் பிரிட்டனில் கல்லூரி வாழ்க்கையை தகவமைத்துக் கொள்வதில் தனக்கு ஏதும் சிரமங்கள் இருக்கவில்லை என்று தோஷி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .