நான் 26 வயதாக இருந்த போது, ஒருவன் என்னை மிரட்டி திருமணம்...

"> Tamilmirror Online || 19ஆம் நூற்றாண்டின் கடைசி பெண்மணி காலமானார்

2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

19ஆம் நூற்றாண்டின் கடைசி பெண்மணி காலமானார்

Gavitha   / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் வயதான பெண்மணியும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா, தனது 117ஆவது வயதில் காலமானார்.

உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ, தனது 117ஆவது பிறந்தநாளை, கடந்த டிசெம்பர் மாதம் ​கொண்டாடினார்.

1899ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி பிறந்த எம்மா, 19ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார். கடந்த பிறந்த நாளின் போது, தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:-

“என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65ஆவது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன்.

“நான் 26 வயதாக இருந்த போது, ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.

“பின்னர் என்னுடைய கணவனை, நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன். இத்தாலியில் அதுவே முதல் சம்பவமாக இருந்தது.

“பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து கூட நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள்”  என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ள இவர், தன் வாழ்நாளில், இரண்டு உலகப் போர்களையும் பார்த்துள்ளார். இத்தாலியில், இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளது.

மொரனோ மரணத்தைத் தொடர்ந்து, 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யாரும் இல்லை என்று என்பது, கிட்டத் தட்ட உறுதியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .