உலகின் மிகப்பெரிய முதலையாக அறிவிக்கப்பட்ட பிலிப்பைன்ஸின் வாடா பகுதியைச் சேர்ந்த முதலை, உடல்நலக் குறைவு காரணமாக... "> Tamilmirror Online || உலகின் மிகப் பெரிய முதலை இறந்தது

2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

உலகின் மிகப் பெரிய முதலை இறந்தது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய முதலையாக அறிவிக்கப்பட்ட பிலிப்பைன்ஸின் வாடா பகுதியைச் சேர்ந்த முதலை, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு உப்பு தண்ணீரில் வாழும் முதலை ஒன்று பிடிக்கப்பட்டது. 6.17 மீற்றர் (20.24 அடி) நீளமும், ஒரு தொன் எடையும் கொண்ட இந்த முதலை பின்னர் அந்த முதலையை பாதுகாப்பாக வளர்த்து வந்த நிலையில் அந்த முதலை உடல் நலக் குறைவு காரணமாக இறந்தது.

இருந்த போதும் முழு பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும். இறந்த அந்த முதலை சுமார் 50 வயது இருக்கும் என கணித்துள்ளனர். முதலை இறந்த செய்தி கேட்டு அக்கிராம மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.

எங்கள் சிறு கிராமம் உலக அளவில் தெரிய உதவிய அந்த முதலையின் ஞாபாகர்த்தமாக அதை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .