உலகிலே மிக உயரமான பேர்கரை இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் தயாரித்துள்ளார்.... "> Tamilmirror Online || உலகிலே மிக உயரமான பேர்கர்

2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

உலகிலே மிக உயரமான பேர்கர்

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலே மிக உயரமான பேர்கரை இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் தயாரித்துள்ளார்.

இங்கிலாந்தில் லேன்கெஷ்ய எனும் பிரதேசத்தைச் சேர்ந்த கிலாஸ்கன் (வயது 54) என்பவரே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

5 அடி 4 அங்குல உயரம் கொண்ட இப் பேர்கர் 8.5 கிலோ கிராமை கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சலாது, சீஸ், சோஸ் என்பவற்றை உள்ளடக்கி  30,000 கலோரிகளை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.

பேர்கர் உருண்டு விழாமல் இருப்பதற்காக கிலாஸ்கனின் மனைவி கெரின் (வயது 39) உலோகத்தினாலான தட்டு ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஒவ்வொரு சீஸ் பேர்கரின் நடுவில் இறைச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு வித்தியசமாக காணப்படுகின்றன. 

'இவ்வாறான பாரிய பேர்கரை யாராவது உருவாக்கியுள்ளார்களாக என்று நான் ஆராய்ந்து பார்த்தேன். ஆனால் யாரும் உருவாக்கவில்லை. 

அனைவருக்கும் எங்களை பார்க்க கிருக்கு தனமாக இருக்கும். ஆனால் நாங்கள் இன்று செய்திருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள் என்று கூறினால் அது மிகையாகாது' என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .