Princiya Dixci / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
18 வயது இளைஞரின் இதயத்துடிப்பை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறுவைச் சிகிச்சையொன்றை மேற்கொண்டு சேலம் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் கடும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரை செய்தனர்.
இதனையடுத்து அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத் திசுக்கள் மூலம் ஓட்டை முழுவதுமாக அடைக்கப்பட்டு, நான்கு மணித்தியாலங்கள் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
30 minute ago
34 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
41 minute ago
50 minute ago