2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

இந்தியாவில் கொவிஜட்-19 பாதிப்பு; பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

இந்தியாவில் கொவிஜட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை 

தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.  இந்தியாவில் கொவிஜட்-19க்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 242 ஆக உயர்ந்து இருந்தது.

கொவிஜட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக் கையில் தொடர்ந்து மராட்டிய மாநிலமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு 1500-க்கும் மேற்பட்டோர் இந்த கொவிஜட்-19

பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்திலேயே

அதிகமாக உள்ளது. கொவிஜட்-19 தாக்குதலால் மராட்டிய மாநிலத்தில் மட்டும் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 969 பேருக்கு கொவிஜட்-19 தொற்று

உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3ஆவது இடத்தில் உள்ள டெல்லியில் 900-க்கும் அதிகமானோர் கொவிஜட்-19 தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ள செய்தியில், கொவிஜட்-19

பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்து உள்ளனர்.  909 பேருக்கு கொவிஜட்-19 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொவிஜட்-19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 273 பேர் பலியாகி உள்ளனர்.  நாடு முழுவதும் 7,367 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று

வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X