2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

சர்ச்சைக்குரிய இரு பிரேரணைகள் நிறைவேற்றம்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

காரைதீவுப் பிரதேச சபையில் அண்மைக்காலமாகக் கலந்துரையாடப்பட்டு, சர்ச்சைக்குரியதாக மாறியிருந்த இரு பிரேரணைகள், நேற்றைய அமர்வில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

காரைதீவு பிரதேச சபையின் 23ஆவது மாதாந்த அமர்வு, தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், சபா மண்டபத்தில் இன்று (13) நடைபெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இந்த அமர்வில் மாளிகைக்காட்டில் மாடறுக்கும் மடுவம் அமைத்தல், மாவடிப்பள்ளியில் மாட்டிறைச்சிக்கடை வழங்கும் செயற்பாடு தொடர்பிலான சர்ச்சைக்குரிய இரு பிரேரணைகள் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டிருந்தன.

மாவடிப்பள்ளியில் காரைதீவு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ப.நோ.கூ.சங்க வளவில் இறைச்சிக்கடையமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவடிப்பள்ளி உறுப்பினர் எம்.ஜலீல், அதற்கான பிரேரணை மீது காரசாரமாக உரைநிகழ்த்தினார்.

இறுதியில், தவிசாளர் அதனை வாக்கெடுப்புக்கு விட்டபோது, 6 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் 1 வாக்கு நடுநிலையாகவும் அளிக்கப்பட்டது.

இப்பிரேரணை 1 வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. அதாவது, இறைச்சிக்கடையை ப.நோ.கூ.சங்க வளாகத்தில் தற்காலிகமாக அமைப்பது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், தனியார் காணியில் வழங்குவது என்ற பிரேரணணை நிறைவேற்றப்பட்டது.

 

பின்னர், மாளிகைக்காடு உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் கொண்டுவந்த மாளிகைக்காட்டில் எம்.ஜ.அஹமட்லெவ்வை என்பவருக்கு மடுவம் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் என்ற பிரேரணை சபையில் விடப்பட்டது.  உறுப்பினர் சி.ஜெயராணி வழிமொழிந்தார். அதற்கு உப தவிசாளர் எம்.ஜ.எம்.ஜாகீர், உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகியோர் எதிர்ப்புத்தெரிவித்து உரையாற்றினர்.

அதுவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 8 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் 1 வாக்கு நடுநிலையாகவும் அளிக்கப்பட்டது.

இப்பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதால் மடுவம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .