2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

15ஆம் கொலனி மக்கள் மீளகுடியேற்ற கோரிக்கை

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள 15ஆம் கொலனி குடியேற்ற கிராம மக்கள், தங்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான இக்கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டுரில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் 25 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்த இக்குடும்பங்கள், தற்போது தங்களது கிராமத்திற்கு தாம் சென்று வந்தாலும் இங்கு மீள்குடியேறுவதற்கு இருப்பிட வசதி உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தித்தராத நிலையில் தாம் தொடர்ந்தும் மண்டுரில் தங்கியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபருடன் தொடர்ப கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .