2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

3 வருடங்களின் பின் மீண்டும் இயங்க ஆரம்பித்த அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை கல்வி வயலத்தில் மாணவர்களின்மையால் கடந்த மூன்று வருடங்களாக இயங்காமல் இருந்து வந்த அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் நேற்று திங்கட்கிழமை முதல் மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளது.

இப்பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களில் சிலர் நேற்றைய தினம் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போக்குவரத்துகான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க மாணவர்களுக்கான உபகரணங்களை நேற்று பாடசாலையில் வைத்து வழங்கினார்.
மாணவர்களுக்கான மேற்படி துவிச்சக்கர வண்டிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மாணவர்களின் வருகையின்மையால் இப்பாடசாலை இயங்காமல் இருந்து வந்தது.

பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்காமைக்கு போக்குவரத்து வசதியின்மையே பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, பாடசாலையிலிருந்து இடைவிலகிய ஏனைய மாணவர்களும் பாடசாலைக்கு வருகை தர வேண்டுமெனவும், பாடசாலையில் மீள இணைந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளைப் போன்று மீள இணையும் ஏனைய மாணவர்களுக்கும் வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அம்பாறை வலய கல்விப் பணிப்பாளர் கூறினார்.



தொடர்புடைய செய்தி:

உறை நிலையில் ஒரு பாடசாலை!
                                                                                                                                                                                                         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X