2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புகளும் அம்பாறை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன.

இதற்கமைவாக, மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் அனுசரணையில், அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஊடாக பெறப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில பிரிவுகளில் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில்
முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணிகளில் மன்றத்தின் நிர்வாகத்தினர் கலந்துகொண்டு, நிவாரணப்பொருள்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .