2025 மே 15, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரியாவிடை வைபவம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

 அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்  கடமையாற்றிவந்த நிலையில், ஓய்வு நிலையை அடைந்த சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கும் சாரதியாக பணியாற்றிய ஒருவருக்குமான பிரியாவிடை வைபவம், பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (23)நடைபெற்றது.

 பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், உதவி பிரதேச செயலாளார் எம்.ஏ.சி. அகமட் நசீல், கணக்காளர் எம்.றிபாஸ், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.நழீர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 30 வருடகால முகாமைத்துவ உதவியாளர் சேவையை மேற்கொண்டு ஓய்வுநிலை அடைந்த கே.எல்.எம்.பைசல், சாரதியாக 23 வருடங்கள் பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற எஸ்.ஐ.ஆதம்லெப்பை ஆகியோரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துப பத்திரமும், அன்பளிப்பு பொருள்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .