Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, இறக்காமம் குளக்கரைக் காணிகளில் அத்துமீறி குடியமர்ந்துள்ள குடியிருப்பாளர்களுக்கு, நாளை மறுதினம் (07) நீதிமன்றத்துக்கு வருமாறு, அம்பாறை நீதவான் நீதமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ. மயூரன் தெரிவித்தார்.
குளக்கரையோரத்தில் அத்துமீறி குடியேறிவர்களுக்கெதிராக, அம்பாறை நீதவான் நீதிமன்றில் செய்யப்பட்ட வழக்குத் தாக்கலுக்கமைவாக, 08 குடியிருப்பாளர்களுக்கு, குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர், நேற்றுக் (04) கூறினார்.
இவ்வாறு அத்துமீறிக் குடியேறியவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளையும் நிறுத்தி, அவற்றை அகற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் பலமுறை அறிவிக்கப்பட்டும் அலட்சியம் செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத கட்டட நிர்மாணிப்பினால் குளக்கரையோரத்தில் தங்கள் தோணிகளை நிறுத்த முடியாமல் அவதிப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தினந்தோறும் குளக்கரையோரக் காணிகளை அடாத்தாகப் பிடித்து, சுற்றிவர வேலி அமைத்து மாடிமனைத் தொகுதிகளும், நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இறக்காமம் குளத்தை நம்பி சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago