Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 மே 26 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் அனுமதி பெறாமல் அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அப்துல் லத்தீப், இன்று (26) தெரிவித்தார்.
“இக்காலப்பகுதியில் மரக்கறிகள், மீன் வகைகள் மற்றும் பேக்கரி உணவுப் பண்டங்கள் ஆகிய அத்தியவசியப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் உள்ளூர் நடமாடும் வியாபாரிகள் அனுமதி பெறாமல் பொருட்களை விற்பனை செய்வதாக அறியமுடிகின்றது.
“நடமாடும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அனுமதிச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக எடுக்கப்பட்டுள்ளது.
“பிரதேச செயலகதத்தில் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்று, பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி ஊடாக பிரதேச செயலாளரினுாடாக மாவட்டச் செயலாளரால் இதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும்..
“இவ்வாறு அனுமதி பெற்ற வியாபாரிகள் கட்டாயம் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன், வியாபார நடவடிக்கையின் போது கையுறை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகள் கட்டாயம் பேணப்படல் வேண்டும்.
இந்த நிபந்தனைகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
1 hours ago