Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2017 மார்ச் 29 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி. அன்சார்
கல்முனை, சாய்ந்தமருது,இஸ்லாமபாத், நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றசாக், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஐ.எல்.எம். மாஹிர், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டமுதுமானி நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீட் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம், சேனைக்குடியிருப்பு சனசமூக சிகிச்சை நிலையம், இஸ்லாமபாத் சனசமூக சிகிச்சை நிலையம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடம், கல்முனை ஆயுர்வேத வைத்தியாலை என்பன திறந்து வைக்கப்படவுள்ளன.
மேலும், கல்முனை றோயல் வித்தியாலயத்தின் நீண்ட நாள் குறைபாடாகவிருந்த வகுப்பறைப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு ஏதுவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் முயற்சியினால் அப்பாடசாலையில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக மாலை 4மணியளவில், பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago