Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 05 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (04) இரவு மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த பெரியதம்பி சற்குணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உமரி பகுதி கடற்கரையில் உயிரிழந்த நிலையில், சம்பவதினமான நேற்று திங்கள் இரவு 6.30 மணியளவில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டுள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசேதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
13 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
55 minute ago
2 hours ago