2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை பதில் அரசாங்க அதிபராக ஜெகதீசன் நியமனம்

Editorial   / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.

அவரது வெற்றிடத்துக்கு பொது நிர்வாக அமைச்சு இப்பதில் நியமனத்தை வழங்கியுள்ளது.

பாண்டிருப்பைச் சேர்ந்த வே.ஜெகதீசன், முன்னதாக ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு  போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக பணியாற்றி, இறுதியாக 2019இல் பதவியுர்வு பெற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X