Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 29 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.சஹாப்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நேற்று (28) நடைபெற்றது.
மரணித்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான றசீட் எம்.ஹபீல், சிவப்பிரகாசம் மற்றும் பன்னூலாசிரியரான எம்.எம்.எம்.நூறுல் ஹக் ஆகியோருக்கான நினைவுரைகள் இதன்போது நிகழ்த்தப்பட்டன.
போரத்தின் தவிசாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம். ஏ.பகுர்தீன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியாளர் அஸ்லம் மௌலானா ஆகியோர் குறித்த நினைவுரைகளை நிகழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பி. முஹாஜிரின் தலைமையில் (2021/ 2022) நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.
புதிய நிர்வாக சபை விவரம்
தவிசாளர்: எம்.சஹாப்தீன்
தலைவர்: எம்.ஏ.பகுர்தீன்
செயலாளர்: எம்.எஸ்.எம்.ஹனீபா
பொருளாளர்: எம்.எஸ்.எம்.அப்துல் மலீக்
அமைப்பாளர்: யூ.எல்.எம்.றியாஸ்
பிரதித் தலைவர்: ஏ.எல்.ஏ.நிப்றாஸ்
உப தலைவர்: வி.சுகிர்தகுமார்
உப செயலாளர்: யூ.கே.காலிதீன்
கணக்காய்வாளர்: ஏ.எல்.றியாஸ்
நிர்வாக உறுப்பினர்கள்
எம்.எப்.நவாஸ்
எம்.ஐ.எம்.வலீத்
எல்.கஜன்
என்.எம்.எம்.புவாட்
கே.எல்.அமீர்
பி.முஹாஜிரீன்
ஏ.எல்.எம்.சியாத்
ஐ.உசைதீன்
அஸ்லம் மௌளானா
இக்கூட்டத்தின் போது ஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் மற்றும் போரத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago