2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டச் சம்மேளனத்தின் நிறைவு விழா

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்டச் சம்மேளனத்தின் 38ஆவது நிறைவு விழா, எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தச் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே.எல்.சுபைர் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவின்போது, 21 சமூக சேவையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன், சிறப்பு மலர் வெளியீடு மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இந்தச் சிறப்பு மலரின் முதல் பிரதியை தேசமான்ய இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X