2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகம்

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி.அன்சார்

அம்பாறை  மாவட்ட  ஊடகவியலாளர்  சம்மேளனத்தின் தலைவராக கலாபூசணம்  மீரா எஸ். இஸ்ஸடீன், மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில், அட்டாளைச்சேனை  ஒஸ்ரா வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.

இதன்போதே,  அம்பாறை  மாவட்ட  ஊடகவியலாளர்  சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக ஏ.ஜே.எம். ஹனீபா மற்றும் பொருளாளராக எம். ஐ.எம். றியாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

2017/2018  ஆம் ஆண்டுக்கான  புதிய நிர்வாகிகள் முழு விவரம்: -

தலைவர் - கலா பூசணம்  மீரா எஸ்.இஸ்ஸடீன்  

உப தலைவர்கள் – ஐ.எல். றிஸான், பி.எம்.ஏ. காதர் 

செயலாளர் – ஏ.ஜே.எம்.ஹனீபா 

உப செயலாளர்- எஸ்.நடன சபேசன்

பொருளாளர்- எம்.ஐ.எம். றியாஸ்

கணக்காய்வாளர்- இஸட்.ஏ. றகுமான்

சிரேஷ்ட ஆலோசகர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் 

நிர்வாக சபை உறுப்பினர்கள் – ஆர்.தில்லைநாயகம், எஸ்.எல். அஸீஸ், யு.எம்.இஷாக், எம்.முஸ்தபா, எம்.ஐ. சம்சுதீன், ரீ,கே. றஹ்மத்துல்லா, ஏ.புஹாது, ஏ.கே. ஜஃபர், எம்.எல்.சரீப்தீன், மற்றும் எம்.சி. அன்சார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .