2025 மே 01, வியாழக்கிழமை

அம்பாறையிலும் சைட்டத்துக்கு எதிராக பணி புறக்கணிப்பு

Yuganthini   / 2017 மே 05 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, நாடளாவிய ரீதியில் அரச வைத்திய சங்கம் நடாத்தும் பணி புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து, அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகள் இன்று(5) பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த பணி புறக்கணிப்பினை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ள உள்ளன.

குறித்த பணிபுறக்கணிப்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள், பணிப்பாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள்,சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலயங்களில் கடமையாற்றும் வைத்தியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பணிபுறக்கணிப்பில் ஈடுபடும் வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினால், நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .