Editorial / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் 'அரண்' சஞ்சிகை வெளியீட்டு விழா, பணிமனை கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தெளபீக் கெளரவ அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
சஞ்சிகையின் முதற் பிரதி தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago