2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அஷ்ரப் வைத்தியசாலையில் ரூ.2,000 மில். செலவில் விபத்துப் பிரிவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான 06 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகள், சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமால், நேற்று முன்தினம் (31) ஆரம்பித்துவைக்கப்பட்டன.

வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்களான ஏ.எம்.மாஹிர், எம்.எம்.பாரூக், ஜெஸீலுல் இலாஹி, எம்.எம்.முனீர் உட்பட தாதியர், ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக, 2,000 மில்லியன் ரூபாய் நிதியை, சுகாதார அமைச்சு ஒதுக்கியிருப்பதுடன், 2018.07.17ஆம் திகதியன்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X