Editorial / 2021 நவம்பர் 07 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் வலயங்களுக்கிடையிலான 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ளநாயகம், இன்று (07) தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றுநிரூபம் மாகாணத்திலுள்ள சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வலயத்திலிருந்து இன்னுமொரு வலயத்திற்கு தனது விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள், தமது வலயத்துக்கென வலய இடமாற்ற அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற அதிகூடிய சேவைக் காலத்தை விட கடமை புரிகின்ற ஆசிரியர்கள், முதல் நியமன வலயத்தில் நியமனக் கடிதத்தின்படி கட்டாய சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் மற்றும் நியமனக் கடிதத்தில் கட்டாய சேவைக் காலம் குறிப்பிட்டிருக்காவிட்டால் முதல் நியமனத்திலிருந்து 05 வருட கால சேவையை அவ்வலயத்தில் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுள்ளன.
www.ep.gov.lk/en/depteduindex எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago