2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 மார்ச் 25 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தமிழ்மொழிமூலப் பட்டதாரி பயிலுநர்களையும் ஆசிரியர் உதவியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவென, கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி முத்துபண்டா அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 2019.04.11ஆம் திகதி அல்லது அதற்கு முன்பு பட்டம் பெற்ற பட்டதாரிகள், பட்டதாரி பயிலுநராகவும், க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், ஆசிரியர் உதவியாளர்களாகவும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

ஆசிரியர் உதவியாளர்களாக விண்ணப்பிப்பவர்கள், 2017ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் உள்ள ஏதாவது ஓர் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன், க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் மொழி உட்பட முதலாவது அமர்வில் ஐந்து பாடங்களில் மூன்று திறமைச் சித்தியுடன் கூடியதாக சித்தியடைந்திருப்பது கட்டாயமானதாகும்.

பட்டாதாரிப் பயிலுநர்களாக விண்ணப்பிக்கின்றவர்கள், ஏப்ரல் 11ஆம் திகதிக்கு 18 வயதை விடக் குறையாதவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆசிரியர் உதவியாளர்களாக விண்ணப்பிப்பவர்கள், ஏப்ரல் 11ஆம்  திகதிக்கு 18 வயதை விடக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்தை, ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், கல்வியமைச்சு, கிழக்கு மாகாணம், உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X