Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 மே 19 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய ஆடைத்தொழிற்சாலையை, கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாளை (20) பிற்பகல் திறந்து வைக்கவுள்ளார்.
ஆலையடிவேம்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழுத்தலைவர் தா.ஜெயாகர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் அமீர் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
பிற்பகல் 4 மணியளவில் வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமாகும் நிகழ்வை அடுத்து, ஆடைத்தொழிற்சாலை திறந்து வைக்கப்படும். தொடர்ந்து 50 பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கி வைக்கப்படுவதுடன் 20 தாய்மார்களுக்கான ஆடைகளும் இந்நிகழ்வின்போது வழங்கி வைக்கப்படவுள்ளன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago