2025 மே 15, வியாழக்கிழமை

ஆறு நூல்களின் வெளியீட்டு விழா

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

பன்னூல் பெண் எழுத்தாளரும் ஓய்வு நிலை ஆசிரியையுமான எம்.ஐ.எம்.மதீனா உம்மாஹ், 06 மாதங்களில் எழுதிய 06 நூல்களின் வெளியீட்டு விழா, அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர்கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) காலை 9 மணிக்கு  நடைபெறவுள்ளன.

சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின்போது, கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.நவனீதன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதன்மைப் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் சாதியா பௌசர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

மானிட சமூகவியல் படிப்பனைகள், இரம்மியமான வீடு, சித்திர வேலைப்பாடு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிங்கள,ம் ஆங்கில நூல்கள் அடங்கலாக மனித வாழ்வின் சமூக சமய கலாசார விழுமியங்கள் போன்றவற்றை நேரிய வழியில் வழிப்பட வைக்கும் ஆறு நூல்களே இதன்போது வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .