Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 08 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் ஆற்று மீனின் விலை சடுதியாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பயணக் கட்டுப்பாடு காரணமாக கடல் மீன்களின் வருகை மற்றும் விற்பனை குறைவடைந்த நிலையிலும் மீன்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையிலுமே இந்நிலை தோன்றியுள்ளது.
தற்போது, ஆற்றிலும் களப்பிலும் மீன்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், அவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுகின்ற சிலர், மீன்களுக்கான விலையை அதிகரித்துள்ளனர்.
முன்னர் ஒரு கிலோகிராம் மீன், வியாபாரிகளுக்கு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அதனை வியாபாரிகள் ரூ.200 தொடக்கம் ரூ.250 வரை விற்பனை செய்வர்.
ஆனால், தற்போது சில மீன்பிடியாளர்கள் 250 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதுடன், மக்களிடம் 400 ரூபாய் வரையில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, மீன்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மீன் பிடிக்கப்படும் இடங்களுக்குச் சென்று சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், மீனவர்களுக்கான ஆலோசனையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago