Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2020 மார்ச் 22 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமகன் ஒருவரும் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகளை அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைவாக இந்து இளைஞர் மன்றம் 800 முகக்கவசங்களையும் உதவிக் கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரனின் ஒத்துழைப்புடன் மு.சுரேஸ் எனும் டெயிலர் மூலமாக 300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து பொதுமக்களின் பாவனைக்காக இன்று வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை பாராட்டுவதாகத் தெரிவித்த அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தினர் அதற்கு உறுதுணையாக செயற்படும் அமைச்சரவை, சுகாதாரத்துறையினர், பாதுகாப்புத் துறையினர், செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஊடகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இன்று அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா இல்லத்தில் வைத்து முகக்கவசங்களை சுகாதார துறையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் மன்ற பேரவை தலைவர் த.கயிலாயபிள்ளை இவ்வாறு கூறினார்.
இந்து இளைஞர் மன்றத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை முகக்கவசங்கள் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அகிலனிடம் இன்று மக்களின் தேவையின் நிமித்தம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் நாட்டில் உருவாகியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் பொது அமைப்புகள் வறுமையில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த வைத்தியர் எஸ்.அகிலன் முகக்கவசங்கள் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அதனை அணிவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனவும் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பிலும் விளக்கினார். இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இது இவ்வாறிருக்க, ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மயான அமைதி நிலவி வருவதுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
பாதுகாப்புத் தரப்பினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருவதுடன் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சிலர் நடமாடுவதை அவதானிக்க முடிந்தது.
ஊரடங்கினால் அன்றாட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில பொது அமைப்புகள் அவர்களுக்கான உலர் உணவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
7 hours ago
7 hours ago
9 hours ago