Suganthini Ratnam / 2017 ஜூலை 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார், எம்.எஸ்.எம்.ஹனீபா
ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தி, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம், தனது இலக்கிலிருந்து மாறிவிட்டது என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இந்த அரசாங்கமானது தற்போது பலமான அரசாங்கம் அல்ல என்பதுடன், இந்த அரசாங்கத்தை மக்களால் இலகுவாக வீழ்த்த முடியும் எனவும் அவர் கூறினார்.
'நாட்டின் சமகால அரசியல் நெருக்கடியும், விவசாயம் மற்றும் பொருளாதார வீழ்ச்சியும், மக்களின் நிலைப்பாடுகளும்' எனும் தொனிப்பொருளில் மக்கள் சந்திப்பு, சம்மாந்துறையில் சனிக்கிழமை (8) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,'இந்த நாட்டை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும்; பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கவில்லை. முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களைப் போன்று, தற்போதைய அரசாங்கத்துக்கும் பொருளாதாரக் கொள்கை இல்லை.
'பொருளாதாரத்தை வளர்ச்சியடைச் செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய இந்த அரசாங்கமானது, இப்போது வரிச்சுமையை மக்கள் தலையில் ஏற்றியுள்ளது. மக்களின் வருமானத்தை விட, வரி விதிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால், இந்த நாட்டு மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்வதில் தினமும் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்' என்றார்.
'இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்; இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
'மேலும், இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இனவாதத்தால் நாம் இழந்தவை அதிகமாகும். இந்த அனுபவங்கள் எமக்கு நன்றாகவே உள்ளது.
'எனவே, இந்த நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரவும் நாட்டைப் புதிய பாதையில் கொண்டுசெல்லவும் மக்கள் முன்வர வேண்டும். இனிமேல் உண்மையான ஆட்சி மற்றும் ஜனநாயகத்துக்கான ஆட்சி உருவாக்கப்பட வேண்டும். இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பங்கு மிக அதிகமாக உள்ளது.
நாட்டை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும் மூவின மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தைப்; பாதுகாக்கவும் ஜனநாயகத்தை உருவாக்கவும் மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும். எனவே, எதிர்காலத்தில் மக்கள் தமது தெரிவை சரியாகப் பயன்படுத்தி சரியான முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026