Princiya Dixci / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.சி. அன்சார்
விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும், சம்மாந்துறை, விளினையடிச் சந்தியில் கண்டனப் போராட்டமொன்று, இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.
இக்கண்டனப் போராட்டம், சம்மாந்துறைச் சேர்ந்த விவசாய அமைப்புக்களை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
“அரசே விவசாயிகளை அழிக்காதே”, “கிருமிநாசிகளை வழங்கு”, “சீனாவின் கழிவு வேண்டாம்”, “சேதன உரத்தை நிறுத்தி, இரசாயன உரத்தை உடனடியாக வழங்கு” மற்றும் “விவசாயிகளை பட்டினியால் சாகடிக்காதே” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago